கொதிக்கும் பாலை ஆண் நண்பர் மீது ஊற்றிய இளம்பெண்... அதிர்ச்சி!

 
மகா

 சென்னை திருவல்லிக்கேணி மாடங்குப்பம் கெனால் சாலையில் வசித்து வருபவர்  பிரேம்குமார்.  இவர் நட்சத்திர விடுதியில் நீச்சல் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தார்.  இவருக்கு மகா என்ற இளம் பெண் தோழியாக இருந்தார்.  மகா அதே சாலையில் டீக்கடை வைத்து நடத்தி வந்தார்.  பிரேம்குமார் மற்றும் மகா இருவரும் நண்பர்கள். பிரேம்குமார் தினமும் மகாவின் டீக்கடையில் நின்று பேசுவதை  வாடிக்கையாக வைத்திருந்தார்.  நேற்றிரவு பிரேம்குமார் டீக்கடையில் நின்று மகாவுடன் பேசி வந்த நிலையில் அவரை கிண்டல் செய்துள்ளார்.  

மகா

இதன் தொடர்ச்சியாக விளையாட்டாக  அங்கிருந்த கொதிக்கும் பாலை எடுத்து மகா மீது பிரேம்குமார் விளையாட்டிற்கு தெளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் மகா  கொதிக்கும் பாலை எடுத்து பிரேம்குமாரின் உடலில் ஊற்றிவிட்டார்.  அலறித்துடித்த பிரேம்குமார் மகாவின் கையை பிடித்து முறுக்கினார்.  டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்த வாடிக்கையாளர்கள்  உடனடியாக பிரேம்குமார் மற்றும் மகாவை மீட்டு சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இருவரும் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மகாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருப்பது  குறிப்பிடத்தக்கது. 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web