அதிகாலையில் கோர விபத்து... கட்டுப்பாட்டை இழந்த கார்... 4 பேர் பலியான சோகம்!

 
கார் விபத்து

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், கார் மரத்தின் மீது மோதியதில், இன்று அதிகாலை பெரும் விபத்து நேர்ந்தது. ஈரோடு மாவட்டம் சின்னனூர் கிராமத்தில், கார் சென்று கொண்டிருந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், மரத்தின் மீது மோதிய விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி காலமானார். இதன் மூலமாக பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில், சிகிச்சைப் பெற்று வருகிறார். 

 குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

பங்களாப்புதூரை சேர்ந்த ஐந்து பேர் தீபாவளி கொண்டாடுவதற்காக தங்களது சொந்த ஊருக்கு சென்றுவிட்டு, இன்று அதிகாலை மீண்டும் தங்கள் இல்லத்திற்கு திரும்பி சென்று கொண்டிருந்த போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த கார், மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், இரண்டு பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் ஒருவர் சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார். 

விபத்து

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விபத்தில் பலியானவர்கள் விவரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளி கொண்டாடிவிட்டு திரும்பும்போது விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web