மின்னல் தாக்கி தீப்பிடித்து எரிந்த ராட்சத டேங்கர்... எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீவிபத்து!

 
தீவிபத்து
 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கிழக்கு இந்திய பெட்ரோல் கம்பெனிக்கு  சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. அந்தப்பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அப்போது, தொழிற்சாலையில் உள்ள ராட்சத எண்ணெய் டேங்கர் மீது மின்னல் தாக்கியதை அடுத்து  டேங்கர் தீப்பிடித்து எரிந்தது.


இதையடுத்து தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் உடனடியாக அவசர தீ விபத்து சைரன் ஒலிக்கப்பட்டது. அப்பகுதியில் இருந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தண்ணீர் மற்றும் கெமிக்கல் நுரையை பயன்படுத்தி தீயை அணைத்தனர். உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Visakhapatnam: Indian Navy assists with firefighting efforts for controlling fire in EIPL storage tanker

இந்த விபத்து குறித்து அறிந்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக உறுதி செய்தனர்.  இந்நிலையில் திடீர் தீ விபத்து காரணமாக ராட்சத எண்ணெய் டேங்கர் சேதமாகியிருப்பதாக தொழிற்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?