பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து... லட்சக்கணக்கான மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசம்!

 
சுமங்கலி சில்க்ஸ்
 கோவை மாவட்டம், அவிநாசியில் பிரபல சுமங்கலி சில்க்ஸ் துணிக் கடையில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் துணிகள் எரிந்து நாசமானது. அவிநாசி மேற்கு ரத வீதியில் உள்ள ‘சுமங்கலி சில்க்ஸ்’ துணிக்கடையில் இன்று அதிகாலை திடீரென தீப்பற்றியது. இது குறித்து தகவல் அறிந்து வந்த அவிநாசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் இரண்டு வாகனங்களின் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமங்கலி சில்க்ஸ்

சுமார் ஒரு மணி நேரத்தில் மேலாக போராடி மேலும் பரவாமல் தீயை அணைத்தனர்.  கடை மூடப்பட்டிருந்ததால் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லாத நிலையில் நல்ல வேளையாக உயிரிழப்புகள் ஏதுமில்லை.இந்த  தீ விபத்தில் தரைதளத்தில் வைக்கப்பட்டிருந்த  பல லட்சம் மதிப்பிலான ஜவுளிகள் மற்றும் அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. தீப்பற்றியதற்கான காரணம் குறித்து அவிநாசி போலீசார்  விசாரணை செய்து வருகிறார்கள்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web