பட்டாசுக்கடையில் பயங்கர தீவிபத்து... பயங்க தீவிபத்து... 9 பேர் கவலைக்கிடம்...!!

 
பட்டாசு விபத்து

உத்தரபிரதேச மாநிலத்தில்  மதுரா மாவட்டம் கோபால்பக் பகுதியில்  உள்ள  பட்டாசு கடையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ  மளமளவென பற்றி எரிந்ததில் அருகில் இருந்த பட்டாசு கடைகளுக்கும் தீ பரவியது. இதனால்  பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில், கடைகளில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின.இந்த தீ விபத்து குறித்து அறிந்த  காவல்துறையினர்   தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று கடைகளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

 ராஜேந்திர நகரில் பட்டாசு விபத்து

மேலும், இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்த 12 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அதில் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் கவலை  தெரிவித்துள்ளனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 26 கடைகள் முற்றிலும் நாசமானதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பட்டாசு

இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீவிபத்தில் மாட்டிக் கொண்டவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 
 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web