வெடித்து சிதறிய இயந்திரங்கள்.... இரும்பு தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து!

 
தீவிபத்து

ஆந்திர மாநிலம் திருப்பதியில் நேற்று நள்ளிரவு இரும்பு தொழிற்சாலை ஒன்றின் கொதிக்கலனில் தீ விபத்து ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் 7 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், பென்னேபள்ளியில் தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 50க்கும் மேற்பட்ட பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வரும் நிலையில் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் உலை கொதிக்கலனில் தீ விபத்து ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இந்த விபத்தில் அப்பகுதியில் வேலை செய்து கொண்டுடிருந்த 7 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். தீ விபத்து குறித்து தொழிற்சாலை நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தீவிபத்து

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளர்களை மீட்டு நாயுடு பேட்டை மற்றும் நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகையில், ‘இரவு பணியில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்வது வழக்கம். ஆனால் தொழிற்சாலை நிர்வாகம் 7 பேர் மட்டும் காயமடைந்ததாக தெரிவிக்கின்றனர். மற்ற தொழிலாளர்களின் விவரங்களைத் தெரிவிக்காமல் நிர்வாகத்தினர் மறைக்கின்றனர்” என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web