தமிழகத்தில் மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள் !

 
வாக்காளர் பட்டியல்
 தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று ஜனவரி 6ம் தேதி திங்கட்கிழமை மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்  வெளியிட்டுள்ளார்.  அதன்படி மொத்த வாக்காளர்கள் 6,36,12,950 கோடி எனத் தெரிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் 3.11 கோடி, பெண் வாக்காளர்கள் 3.24 கோடி, 3ம் பாலினத்தவர் 9, 120 பேர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வாக்காளர் பட்டியலில் இந்தி மொழியில் அச்சான பெயர்கள்!! சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம்!!

மேலும் இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி கீழ் வேளூர்(நாகை) தொகுதியில் தான் குறைந்த எண்ணிக்கையில் வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   நாகை தொகுதியில்  1,76,505 வாக்காளர்களும், அதற்கு அடுத்த இடத்தில் துறைமுகம்(சென்னை) 1,78,980 வாக்காளர்களும் உள்ளனர்.

வாக்காளர் பட்டியல்

அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் உள்ளது. அங்கு மொத்தம் 6,90,958 வாக்காளர்கள் இருக்கின்றனர்.  அடுத்த இடத்தில் கவுண்டம்பாளையம்(கோவை) தொகுதியில் மொத்தம் 4,91,143 பேர் வாக்களிக்க தகுதி பெற்று இருப்பதாக வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web