கோர விபத்து... காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காரும், லாரியும் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தாய், தந்தை, மகள் உட்பட 4 பேர் பலியாகினர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராமநாதபுரம், செட்டியார் தெருவில் வசித்து வருபவர் 63 வயது கோவிந்தராஜன். இவரது மனைவி 55 வயது யமுனா . மகள் 30வயது ரூபினி . மகன் 30 வயது சரண்ராஜ் . இவர்களுடன் ஆகஸ்ட் 30 தேதி இரவு வாடகை காரில் குற்றாலத்திற்கு புறப்பட்டார். காரை ராமநாதபுரம் மாவட்டம், மணக்குடியை சேர்ந்த டிரைவர் காளீஸ்வரன் ஓட்டிச் சென்றார்.

இந்நிலையில் ராமநாதபுரம் - மதுரை நான்குவழிச் சாலையில் பரமக்குடி அருகே நென்மேனி பகுதியில் நேற்று அதிகாலை காரும், எதிரே மதுரையில் இருந்து ராமநாதபுரம் சென்ற சரக்கு வாகனமும் திடீரென நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் காரின் முன் பகுதி பலத்த சேதமடைந்து காரில் இருந்த யமுனா, ரூபினி, டிரைவர் காளீஸ்வரன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். கோவிந்தராஜன், சரண்ராஜ் இருவரும் படுகாயம் அடைந்தனர். சரக்கு வாகனத்தில் மொத்தம் 5 பேர் இருந்தனர். அவர்கள், மதுரையில் இருந்து வீடு காலி செய்து விட்டு பொருட்களை ஏற்றிச்சென்றபோது இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. அந்த வாகனத்தில் இருந்தவர்களில் டிரைவர் முத்துராஜா, நாகநாதன் ஜெயமாலா மூவரும் படுகாயம் அடைந்தனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் வந்து காயமடைந்த 5 பேரையும் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். முதலுதவிக்கு பிறகு மதுரை அரசு மருத்துவமனைக்கு 5 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர். கொண்டு செல்லும் வழியிலேயே கோவிந்தராஜன் உயிரிழந்து விட்டார். மற்ற 4 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
