கோர விபத்து.. பைக் மீது அதிவேகத்தில் மோதிய சொகுசு கார்.. தூக்கி வீசப்பட்ட குடும்பம்!

 
தரங்கம்பாடி விபத்து

சிதம்பரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடை வீதி அருகே ஜூன் 21ஆம் தேதி அதிவேகமாகச் சென்ற கார் எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இருசக்கர வாகனத்தில் சென்ற பூம்புகார் அடுத்த வானகிரி மீனவ கிராமம் சுனாமி நகரை சேர்ந்த 22 வயது ஸ்ரீதர் மற்றும் அவரது மனைவி சசிகலா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இவர்களின் 2 வயது மகன் பாரத் சஞ்சன் பலத்த காயமடைந்தார்.

ஸ்ரீதர், தனது மனைவி மற்றும் மகனுடன் இருசக்கர வாகனத்தில் வெளியூர் சென்றுவிட்டு, தரங்கம்பாடி சாலை வழியாக மூவரும் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக ஸ்ரீதரின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் தூக்கி வீசப்பட்டனர். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ஸ்ரீதர் தலையிலும், மனைவி சசிகலா தலையிலும், வலது கையிலும், குழந்தை பாரத் சஞ்சன் இடுப்பிலும் பலத்த அடிபட்டு சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

இதையடுத்து பொறையார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அருகில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்து 108 ஆம்புலன்சில் பொறையார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் ஸ்ரீதர் மற்றும் அவரது மனைவி சசிகலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தை பாரத் சஞ்சன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

இதையடுத்து, விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் சென்னையைச் சேர்ந்த அருள் சாலமன் (43) என்பவரை பொறையார் போலீஸார் கைது செய்து, காரைக் கைப்பற்றி காவல் நிலையம் கொண்டு சென்று விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், காரும் இரு சக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web