பகீர்... இளைஞரின் கழுத்தைச் சுற்றிய கேபிள் வயர்... பேருந்தின் அடியில் விழுந்த பரிதாபம்!

 
ராயபுரம் விபத்து

தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் இருசக்கர வாகனத்தில் செல்வது எல்லாம் சர்க்கஸ் கூட்டிற்குள் செய்யும் சாகச பயணம் தான். அதே போன்று உயிரை பணயம் வைத்து தான் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. எத்தனை சட்டம் போட்டாலும், நீதிமன்றம் உத்தரவிட்டாலும், முதல்வர், அமைச்சர்கள், வட்டம், மாவட்டம், எதிர்கட்சி, உபரி கட்சி, ஜாதி கட்சி இவைகள் தவிர கல்யாணம், காதுகுத்து, தன் மகள் பூப்படைந்ததை ப்ளெக்ஸ் பேனர் வைத்து ஊருக்கே சொல்லும் அப்பாக்கள், தாய்மாமன்கள், 16ம் நாள் காரியம் முதல் அட்மிஷன்களுக்கு வலை வீசும் கல்லூரிகள் வரை சாலைகளின் குறுக்கே வைக்கப்படுகிற ப்ளெக்ஸ் பேனர்கள் உயிரைப் பதம் பார்க்கும்.தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் காற்றாடிகள் கழுத்தை இறுக்கி ஆளைக் கொல்லும். மரம் முழுக்க பூக்களுக்கு பதிலாக இயேசுநாதரைப் போல ஆணிகளை சுமந்து மூலம், பவுத்திரம் விளம்பரம் பேசும். இது சென்னையின் சாபக்கேடு போல. 

அப்படி ஓர் இளைஞர் நூலிழையில் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார். சென்னை, ராயபுரம் கல்மண்டபம் பிரதான சாலையின் நடுவே தொங்கிக் கொண்டிருந்த தனியார் இணையதள கேபிள்களில் இருசக்கர வாகனம் சிக்கியதால், பேருந்து ஓட்டுநர் சரியான நேரத்தில் பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரின் கழுத்தில் கேபிள் வயர் சிக்கியதால், நிலைத்தடுமாறியவர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், பேருந்தின் அடியில் விழுந்தார். பின்னர், கீழே விழுந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போக்குவரத்து போலீசார், அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கேபிள் ஒயர்களை அகற்றினர். எனினும் சிறு காயங்களுடன் இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தனியார் இணைய சேவை நிறுவனமொன்றின் கேபிள் வயர்கள் வீதியின் குறுக்கே தொங்கிக் கொண்டிருந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து குறித்து ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web