கோர விபத்து.. 350 கேஸ் சிலிண்டர்களுடன் ஆற்றில் சொருகிய லாரி!

 
லாரி விபத்து

திருவாரூர் அருகே நேற்று மாலை டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 350 கேஸ் சிலிண்டர்களுடன் சென்ற லாரி ஆற்றில் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த அடையாறு நத்தம் கிராமத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்துக்குச் சொந்தமான எரிவாயு உருளை நிரப்பும் ஆலை இயங்கி வருகிறது.  இந்த ஆலையில் இருந்து, டெல்டா மாவட்டங்களில் உள்ள பல நகரங்களுக்கு வணிக மற்றும் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர்கள் சப்ளை செய்யப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை இந்த ஆலையில் இருந்து வீட்டு உபயோகத்திற்காக 350 கேஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு தனியார் லாரி ஒன்று நாகப்பட்டினத்திற்கு புறப்பட்டது. லாரியை நாகப்பட்டினம் நீலக்குடியை சேர்ந்த ஆனந்தன் (50) என்பவர் ஓட்டி வந்தார். மன்னார்குடி - திருவாரூர் பிரதான சாலையில், கோரையாட்டு பாலம் அருகே சென்றபோது, ​​லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது. லாரியில் இருந்த எரிவாயு சிலிண்டர்கள் ஆற்றில் விழுந்தன.

தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் மற்றும் கூத்தாநல்லூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் சிதறிக் கிடந்த காஸ் சிலிண்டர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு மற்றொரு லாரி மூலம் நாகப்பட்டினத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி மீட்கப்பட்டது. காயமடைந்த லாரி டிரைவர் ஆனந்தன் மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web