கோர விபத்து.. இருசக்கர வாகனத்தை ஓட்டிய சிறுவன் உட்பட இருவர் கைது!

 
அம்மாபேட்டை விபத்து

சேலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 16 வயது சிறுவன் விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் தந்தை உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் 16 வயது மகன் தனது உறவினரின் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்தார்.

அப்போது அம்மாபேட்டை காமராஜ் நகர் காலனி பகுதியில் நடந்த விபத்தில் அச்சிறுவன் அங்கப்பன் என்பவர் மீது மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தார். காயம் அடைந்த இருவரையும் போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் சிறுவன் மீதும், வாகனத்தை ஓட்ட அனுமதித்த தந்தை குமார் மீதும், வாகனம் கொடுத்த வாலிபரின் உறவினர் குணசேகரன் மீதும் அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வாகன பதிவை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web