ஏரியில் விழுந்த பயிற்சி விமானம்... தஞ்சையில் பரபரப்பு!

 
தஞ்சை ஏரி


தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கண்ணந்தங்குடி கீழையூர் நீலாறு ஏரியில் நேற்று பலத்த சத்தத்தோடு பயிற்சி விமானம் கீழே  விழுந்து நொறுங்கியது.  இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த  போலீசார் மற்றும் தீயணைப்பு துறை, வருவாய் துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

தஞ்சை ஏரி

இதில் விமானம் விழுந்து நொறுங்கியதற்கான எந்த ஒரு ஆதாரங்களும்  கிடைக்கவில்லை. வதந்தியை கிளப்பியது யார் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் குலமங்கலம் வயற்காட்டில் விழுந்து நொறுங்கி எரிந்த நிலையில் இருப்பது போல் ஒரு படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

போலீஸ்

இந்த புகைப்படத்தை ஆய்வு செய்த போலீசார், இது வடமாநிலத்தில் முன்பு நடந்த விமான விபத்து புகைப்படம் எனத் தெரியவில்லை. பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் படம் வெளியிட்ட நபரை போலீசார் உடனடியாக கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web