பள்ளி வேன் மீது லாரி மோதி கோர விபத்து... 4 வயது குழந்தை உட்பட பேர் பலி... 2 மாணவர்கள் கவலைக்கிடம்!

 
உத்திரப்பிரதேசம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளி வேன் மீது லாரி மோதி விபதிற்குள்ளானதில் 4 வயது குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்தனர். 2 மாணவர்கள் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில்  சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

இன்று காலை ரேபரேலி - பிரயாக்ராஜ் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள படோகர் காவல் நிலையப் பகுதியின் பாவ் கிராமத்திற்கு அருகில் சென்றுக் கொண்டிருந்த பள்ளி வேன் மீது லாரி மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் வேன் ஓட்டுநரும், 4 வயது குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர். வேனில் பயணித்த மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். 

உத்தப்பிரதேசம்

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த குழந்தைகளை சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து போலீசார் கூறுகையில், “இன்று காலை பள்ளி மாணவர்களுடன் வேன் சென்றுக் கொண்டிருந்தது. . அப்போது, ​​ரேபரேலி-பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையில் உள்ள பாவ் கிராமம் அருகே எதிரே வந்துக் கொண்டிருந்த லாரி பயங்கர வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் வேன் டிரைவர் பிரபு தயாள் யாதவ் மற்றும் 4 வயது குழந்தை ஹன்ஸ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உத்தரபிரதேச போலீஸ்

வேனில் பயணம் செய்த பிற மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் காவல் நிலைய பொறுப்பாளர் தயானந்த் திவாரி சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த குழந்தைகளை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். இரண்டு குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது” என்றனர்.சாலை விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்த நிலையில் அழுது கொண்டே சம்பவ இடத்தில் குவிந்தனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web