ரயில் நிலையத்திற்குள் காட்டு யானை.. அலறி அடித்து ஓட்டம் பிடித்த பொதுமக்கள்!!

 
யானை

திருவிழாக்கள் கோவில்களில் நாம் பொதுவாக பார்க்கும் யானைகள்  பழக்கப்படுத்தப்பட்ட யானைகள். காட்டு யானைகள் முரட்டுத்தனமாக இருக்கும். யாராவது  தனக்கு தொந்தரவு தரலாம் என நினைத்தாலே அவைகள் மனிதர்களை துவம்சம் செய்துவிடும். அதன் மூடை பொறுத்து தான் எல்லாமே . ஆந்திர மாநிலம் பார்வதிமனியம் மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரத்தில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதிகளில் பெரும் அட்டகாசம் செய்து வருகிறது.

யானை

இதனால் அப்பகுதி மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். மேலும் சில நாட்கள் முன்பு கொமரடா மண்டலத்தில் பயணிகள் சென்ற பேருந்தை  வழிமறித்து  ஒற்றை யானை கண்ணாடியை உடைத்து தாக்குதல் நடத்தியது. இதையடுத்து வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்து சென்றனர். இந்நிலையில் பார்வதிமனியம் ரயில் நிலையத்தில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு இந்த   ஒற்றை காட்டு யானை புகுந்தது.

யானை

இதை பார்த்த பயணிகள்  அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த யானை ரயில் நிலையத்தில் சிறிது நேரம் சுற்றித்திரிந்துவிட்டு சென்றது. அதிகாலை நேரம் என்பதால், ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் மிகமிகக்  குறைவு. அத்துடன்  ரயில் நிலையம் அருகே பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததாலும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ரயில் நிலையத்தில் யானை புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும்  பீதியில் ஆழ்த்தியுள்ளது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web