அதிர்ச்சி... வயலில் மின்னல் தாக்கி பெண் உடல் கருகி பலி!!

 
செல்வி

தமிழகத்தில் பல பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. நேற்று மாலையில்   அரியலூர், தா.பழூர், வி.கைக்காடி, வாலாஜாநகரம்,  தாமரைக்குளம், ஓட்டக்கோவில், செந்துறை, வாரணவாசி, கீழப்பழுவூர் மற்றும் கீழையூர் உட்பட   பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் கீழையூர் கிராமத்தில் வசித்து வருபவர்   நடராஜன்  மனைவி செல்வி.

மின்னல் பலி

இவர் தனது கணவருடன் மாட்டுக்கு தீவனம் அறுக்க தனது வயலுக்கு சென்றுவிட்டார்.  வயலில் பயிரிடப்பட்டிருந்த சோளத்தை அறுத்து அதனை கட்டு கட்டி இருசக்கர வாகனத்தில் கணவர் நடராஜனை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். பிறகு  மீண்டும் சோளத்தை அறுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.  கீழையூர் பகுதியில் மாலை நேரத்தில் மழை பெய்து கொண்டிருக்கும் போது மழைக்கு ஓரமாக பனைமரம் அடியில் அமர்ந்துவிட்டார்.   திடீரென இடி, மின்னல் தாக்கியதில் மரத்திற்கு அடியில் அமர்ந்து கொண்டிருந்த செல்வி மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தார்.

ஆம்புலன்ஸ்


 நீண்ட நேரம் ஆகியும் செல்வி வீட்டிற்கு வரவில்லை என்பதால் வயலுக்கு சென்று பார்த்து போது செல்வி மின்னல் தாக்கி உயிரிழந்த   நிலையில் கிடந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சடைந்தனர். பிறகு செல்வியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர் பரிசோதனை செய்ததில் செல்வி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து வந்த காவல்துறையினர்  உடலை பிரேத பரிசோதனைக்காக    அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   மின்னல் தாக்கி பெண் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும்,  சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!