உங்க பணத்துல நான் புகை பிடிக்கல… ரயிலில் ஏசி கோச்சில் புகைபிடித்த பெண் ஆத்திரத்தி வாக்குவாதம்… பரபரப்பு வீடியோ!

 
கை


 

ரயில் பயணங்களில் பயணிகள் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில் குளிர்சாதன பெட்டியில் ஒரு பெண் புகைபிடித்த சம்பவத்தை பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பயணி ஒருவர் பதிவு செய்து, அந்தப் பெண்ணை பெட்டியில் புகைபிடிக்க வேண்டாம், வெளியே செல்லும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  


ஆனால், இதற்கு அந்தப் பெண் ஆத்திரத்தில்  “நான் உங்கள் பணத்தில் புகைபிடிக்கவில்லை” என கோபமாக வாக்குவாதம் செய்தார். பின்னர், டிக்கெட் சோதனையாளர்  வந்து விசாரித்தபோது, அந்தப் பெண் பதற்றமடைந்து அழ ஆரம்பித்தார். இது சமூக வலைதளங்களில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டிக்கெட் சோதனையாளர் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை அமைதிப்படுத்தினார்.  புகைபிடித்ததற்காக    அபராதம் செலுத்துவது, அபராதமின்றி விடுவிப்பது, அல்லது விவகாரத்தை காவல்துறையிடம் ஒப்படைப்பது என 3 வழிமுறைகளை எடுத்துரைத்தார்.
 
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பயனர்கள் பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.   ஒருவர், “பொது இடத்தில் புகைபிடிப்பது மற்றவர்களின் உடல்நலத்தையும், பயண அனுபவத்தையும் பாதிக்கிறது. இதற்கு கடுமையான தண்டனை தேவை, இது பெண்ணுரிமை பிரச்சினை அல்ல, பொது ஒழுக்கம் பற்றியது,” எனக் கூறினார்.   “குளிர்சாதன பெட்டியில் புகைபிடிப்பது ஆபத்தானது, இதற்கு உரிமை உணர்வு எதற்கு?” என விமர்சித்துள்ளனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?