அதிகாலையில் சோகம்... ஜெப கூட்டம் முடிந்து ஸ்கூட்டியில் திரும்பிய பெண் விபத்தில் உயிரிழப்பு!
சாத்தான்குளம் அருகே ஜெபகூட்டத்திற்கு சென்று வந்தபோது ஸ்கூட்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சத்துணவு பெண் ஊழியர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள வேலாயுதபுரத்தை சேர்ந்தவர் அருள் சிலுவைதுரை மனைவி குழந்தை அமலா (54). இவர் வேப்பங்காடு கீழ ராமசாமிபுரம் புனித அன்னாள் உயர்நிலை பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வந்தார். சிலுவை துரை ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு ராபின்சன் ராஜா உள்பட இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இவர்களில் 2வது மகன், கடந்த ஆண்டு உயிரிழந்து விட்டார். மகள், மகனுக்கு திருமணமாகி விட்டது. இந்நிலையில் நேற்று இரவு குழந்தை அமலா, நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில் நடந்த ஜெபகூட்டத்திற்கு சென்றார். பின்னர் இன்று அதிகாலை5.30 மணி அளவில் அங்கிருந்து சாத்தான்குளத்திற்கு ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தார்.
சாத்தான்குளம் அருகே சங்கரன்குடியிருப்பு - ஆலங்கிணறு பகுதியில் சென்றுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இவரது ஸ்கூட்டி கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அமலா, சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஏசுராஜசேகரன் மற்றும் போலீசார், சம்பவ இடம் சென்று விபத்தில் பலியான அமலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து மூத்த மகன் ராபின்சன்ராஜா அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் வழக்குபதிந்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
