இளம்பெண்ணை கட்டி வைத்து அடித்த கொடூரம்.. மொட்டைமாடியில் செல்போனில் பேசியதால் விபரீதம்... வைரலாகும் வீடியோ!

 
இளம்பெண்ணை கட்டி வைத்து தாக்குதல்

நடுராத்திரி  மொட்டைமாடியில் செல்போனில் பேசிக் கொண்டிருந்த இளம்பெண்ணை, வீட்டில் திருட வந்ததாக நினைத்து, ஒரு கும்பல், இளம்பெண்ணை ப் பிடித்து வைத்து மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

நேபாள நாட்டின் போஹாரா மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் சுஷ்மிதா சரு மஹர், வேலை தேடி இந்தியா வந்துள்ளார். உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டம் பரடரி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் செல்போனில் வந்த அழைப்பை தொடர்ந்து வீட்டின் மொட்டை மாடிக்கு சென்ற சுஷ்மிதா அங்கு நின்றவாறு தனது செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிலர், சுஷ்மிதாவை திருட வந்த பெண் என நினைத்து பிடிக்க முயற்சித்துள்ளனர். அந்த கும்பல் மிரட்டும் வகையில் கூச்சலிட்டு சுஷ்மிதாவை பிடிக்க முயற்சித்ததில் அதிர்ச்சியடைந்த சுஷ்மிதா, அவர்களிடம் இருந்து தப்பிக்கும் நோக்கில் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்ட நிலையில் அந்த கும்பல் சுஷ்மிதாவை கொடூரமாக தாக்கியது.

அதன் பின்னர் சுஷ்மிதாவை மின்கம்பத்தில் கட்டி வைத்து கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். இந்த சம்பவத்தில் காயமடைந்த சுஷ்மிதா, தான் திருடவரவில்லை இங்கு வாடகைக்கு வசித்து வருகிறேன் என கூறியுள்ளார். ஆனாலும், சமாதானம் ஆகாத அந்த கும்பல் அவரை தொடர்ந்து தாக்கியது. இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று சுஷ்மிதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தற்கொலை இளம்பெண் தீ விபத்து கற்பழிப்பு பாலியல் கொலை க்ரைம்

மேலும், அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் , சுஷ்மிதாவை தாக்கிய கவுரவ் சக்சேனா, சிவம் சக்சேனா, அமன் சக்சேனா, அருண் சைனி ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மேலும் சிலரை தேடி வருகின்றனர். சுஷ்மிதாவை கும்பலாக சேர்ந்து அப்பகுதியினர் தாக்கிய வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?