இதப் பார்றா... ஓராண்டாக வணிக வளாக மேற்கூரையில் வசித்து வரும் இளம்பெண்!

 
மேற்கூரையில் இளம்பெண்

 அமெரிக்காவில் உள்ள மிச்சகன் பகுதியில் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.  இந்த வணிக வளாகத்தின் மேற்கூரையில் சுமார் 1 வருடமாக 34 வயது பெண் வசித்து வருகிறார். இதனை காவல்துறையினர் சமீபத்தில் கண்டறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.5 அடி அகலமும், 8 அடி உயரமும் உள்ள ஒரு கதவு அந்த மேற்கூரையில் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் ஒரு சிறிய மேஜை, கம்ப்யூட்டர், காபி மேக்கர், அவரது உடை மற்றும் வீட்டில் வைத்திருக்கக்கூடிய சில பொருட்களுடன் அவரும் வசித்து வந்தார்.  

மேற்கூரையில் இளம்பெண்
மேற்கூரைக்கு செல்ல சரியான வழி இல்லாத நிலையில், பக்கத்தில் உள்ள கட்டிடங்கள் மூலமாக அவர் தினமும் அங்கு சென்று வந்துள்ளார்.  இந்நிலையில் வணிக வளாகத்தில் மேற்கூரைக்கு செல்லும் பாதையில் கம்பி இருப்பதை கண்டறிந்த ஒப்பந்ததாரர் அதுகுறித்து  ஆய்வு செய்தார். அப்போது தான் மேற்கூரை பகுதியில் இளம்பெண் கடந்த ஒரு வருடமாக வசித்து வந்தது கண்டறியப்பட்டது.

அமெரிக்கா போலீஸ்


இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில்  போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தனக்கு  தங்குவதற்கு உரிய வீடு இல்லாததால் மேற்கூரையில் வசித்து வந்ததாக கூறினார். போலீசார் அவரை எச்சரித்ததை தொடர்ந்து அவர் அங்கிருந்து செல்வதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web