10ம் வகுப்பு மாணவியை மிரட்டி பலாத்காரம்... இன்ஜினீயரிங் மாணவர் அட்டூழியம்!

 
மாணவி

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டாரத்தில் பாலக்குமார் (25) என்ற இளைஞர், இன்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். எங்கும் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றியும் வந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஒரு ஊரில் பாலக்குமார் சென்றுள்ளார்.

அப்போது, தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் 14 வயதுடைய மாணவியின் வீட்டுக்கு சென்றுள்ளார். ஏற்கனவே அறிமுகமான நபர் என்பதால் இருவரும் பேசியுள்ளனர். வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் படிப்பதற்கு புத்தகம் வேண்டும் என்றும், அதை எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்கு வருமாறும் கூறினார்.

மாணவி

இதையடுத்து, அவர் கேட்ட புத்தகத்தை எடுத்துக் கொண்டு மாணவியும் பாலக்குமார் வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டில் புத்தகத்தை வாங்கிக் கொண்டு, மாணவியை வீட்டிற்குள் அழைத்துள்ளார். அப்போது பாலக்குமார் திடீரென மாணவியை ஒரு அறையில் வைத்து கதவை பூட்டினார். பின்னர் அவர், துப்பட்டாவால் மாணவியின் கையை கட்டியுள்ளார்.

இதனையடுத்து மாணவியை மிரட்டி அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதையடுத்து பாலக்குமார் கட்டை அவிழ்த்து விட்டதும், வீட்டுக்கு வந்த மாணவி நடந்த சம்பவம் குறித்து தனது பாட்டியிடம் கூறி கதறி அழுதுள்ளார். உடனே அவர், மாணவியை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். 

மாணவி

அங்கு டாக்டர்கள், மாணவிக்கு சிகிச்சை அளித்ததோடு போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின்னரே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அதன் பேரில் மகளிர் போலீசார் விரைந்து சென்று, மாணவியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பாலக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web