மனிதம் பேசும் நேசம்... குரங்குக்கு மூச்சுக்காற்று கொடுத்து காப்பாற்றும் இளைஞர்... வைரல் வீடியோ!!

 
குரங்கு

நாம் செல்லும் வழியில் மனிதர்கள் அடிபட்டு கிடந்தாலே பலரும் கண்டு கொள்வதில்லை. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குரங்கிற்கு ஒருவர் மூச்சுக்காற்று கொடுத்து காப்பாற்றியுள்ளார் . இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. இந்த இளைஞருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த கோட்டைச்சேரி பகுதியில் உயர் அழுத்த மின் கம்பத்தில்  பல குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்தன.


 

அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு குரங்கு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து மயக்கம் அடைந்தது. குரங்கு தாவுவதை அங்கிருந்த இளைஞர்கள் சிலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த பகுதியில் வசித்து வரும் நிதிஷ் என்ற இளைஞர்   பாய்ந்து வந்து, அந்த குரங்கின் வாயோடு வாய் வைத்து மூச்சுக்காற்று கொடுத்து உதவினார்.

குரங்கு

அத்துடன்  அதன் மார்பு மீது இரண்டு கைகளை வைத்து அழுத்தியும் கடுமையாக போராடி குரங்கை காப்பாற்றியுள்ளார். இதனையடுத்து குரங்கு அங்கிருந்து சென்றது. மூச்சுக்காற்று கொடுத்து குரங்கின் உயிரை காப்பாற்றிய இளைஞர் நிதிஷை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web