விபத்தில் உயிரிழந்த மனைவி... உடலை பைக்கில் கட்டி சொந்த ஊருக்கு கொண்டு சென்ற இளைஞர்!

 
பைக்


மகாராஷ்டிரா மாநிலத்தில்  நாக்பூரில் வசித்து வருபவர் அமித் யாதவ்/   இவர் நேற்று முன்தினம் தனது மனைவி கியார்ஸியுடன்  சொந்த ஊரான மபி மாநிலம் கரன்பூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். தியோலாபரில்  கனரக வாகனம் பைக் மீது மோதியதில் கியார்ஸி உயிரிழந்தார். இந்த விபத்தில் அமித் காயமடைந்தார்.அப்போது உடலை எடுத்து செல்ல வாகன ஓட்டிகளிடம் அமித் உதவி கேட்டிருந்தார். அவருக்கு யாருமே உதவ முன்வரவில்லை.
இதனால் தனது பைக்கில் மனைவியின் உடலை கட்டி எடுத்து சென்றுள்ளார். இது குறித்த  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  நாக்பூர்-சியோனி நெடுஞ்சாலையில்  நடந்த விபத்து குறித்து மகாராஷ்டிரா போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த இடத்தில் போலீசார் சென்று பார்த்த போது வாகனத்தையோ உடலையோ காணவில்லை.  நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக நாக்பூரில் இருந்து 80 கிமீ தொலைவில் உள்ள ஒரு பகுதியில் பைக்கை போலீசார் நிறுத்தினர்.  பெண்ணின் உடலை கைப்பற்றி நாக்பூரில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?