வாலிபர் சரமாரி வெட்டி கொலை... மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு!

 
அரிவாள் வெட்டு

தூத்துக்குடியில் வாலிபரை சரமாரி வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி சிலோன் காலனி மாரியப்பன் மகன் அஜய் என்ற ஜப்பான் (21), இவர் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உள்பட 4 வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பசும்பொன் நகர் இரண்டாவது தெருவில் வைத்து இன்று இரவு 8 மணி அளவில் 3 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 

பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு

சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இவரது 13 வயது தங்கை இன்று காலையில் இருந்து காணவில்லையாம் இது குறித்து அவரது தாயார் முத்துச்செல்வி தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த 13 வயது சிறுமியை தேடி வந்தனர். 

அரிவாள் வெட்டு

இந்த நிலையில் தான் அவரது அண்ணன் அஜய் என்ற ஜப்பான் பசும்பொன் நகரில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் தங்கையின் விவகாரம் காரணமாக இவரை மர்ம கும்ப கும்பல் ஏமாற்றி அழைத்துச் சென்று கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரை மூன்று பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது அங்குள்ள சிசிடி கேமராவில் பதிவாகியுள்ளது. சம்பவ இடத்தை தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுதிர் பார்வையிட்டார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க