லாரி மீது மின்சாரக்கம்பி உரசி இளைஞர் பரிதாப பலி...!!

 
முத்துப்பாண்டி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை தாலுகா சிறுபட்டாக்கரை கிராமத்தில் வசித்து வருபவர் ரவிக்குமார்.    இவர் நெல் அறுவடை இயந்திரத்தை லாரியில் ஏற்றிச் சென்றார்.  அப்போது மன்னார்குடி முத்துப்பேட்டை சாலையில் வந்தபோது லாரியின் மீது சாலையில் மேல் சென்ற உயர்மின்னழுத்த கம்பி உரசி மின்சாரம் பாய்ந்து இருக்கிறது. 

மின்சாரம்
அதனை அறியாமல் ஓட்டுநர் ரவிக்குமார் லாரியை எடுத்துச் சென்று இருக்கிறார். அப்போது லாரிக்குள் மின்சாரம் பாய்ந்து ஓட்டுநர் ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

ஆம்புலன்ஸ்
பின்னர் ஓட்டுநரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தாழ்வாக சென்ற மின் கம்பி உரசியதாலேயே விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web