சூப்பர்... நடுவானில் விமானத்தில் மயங்கி சரிந்த இளம்பெண்... ஆப்பிள் வாட்ச் மூலம் உயிரைக் காத்த மருத்துவர்!

 
ஆப்பிள் வாட்ச்

 
 ஜூலை 2ம் தேதி இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோவுக்கு  ஏர் இந்தியா விமானம் ஒன்று கிளம்பியது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது 56 வயது மதிக்கத்தக்க பெண் பயணி ஒருவர் திடீரென மயக்கம் அடைந்தார்.   பணிப்பெண்கள் முதலுதவி செய்ய முயற்சித்தனர்.

சான்பிரான்சிஸ்கோ

அப்போது அதே விமானத்தில் கேரளாவில் வசித்து வரும் மருத்துவர்  குருட்டுகுலம்  அந்த பெண்ணின் உடல் நிலையை உடனடியாக பரிசோதித்தார். அவர் எந்த ஒரு மருத்துவ உபகரணங்களும் இன்றி அந்தப் பெண் தன் கையில் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் உதவியுடன் இதயத்துடிப்பை சோதித்தார்.
அதே முறையில்  எலக்ட்ரோ கார்டியோகிராம் சோதனையும் செய்தார். சோதனை முடிவில் மயங்கிய  பெண்ணுக்கு ஆக்சிஜன் குறைந்ததும்,  ரத்த அழுத்தம் அதிகரித்ததும்  தெரிய வந்தது.

ஏர் நியூசிலாந்து விமானம்

உடனடியாக விமானத்தில் இருந்த மருந்து பொருட்களை வைத்து அந்த பெண்ணின் உயிரை காப்பாற்றினார். இந்த விமானம் சான் பிரான்சிஸ்கோ சென்ற பிறகு பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது  அவருடைய உடல்நலம் சீராக இருப்பதாகவும், விமானத்தில் கேரள மருத்துவர் அளித்த முதலுதவி தான் காரணம் எனவும்  தெரிவிக்கப்பட்டது. அவருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web