புதிய பான் கார்டு விண்ணப்பிக்க ஆதார் கட்டாயம்… மத்திய அரசு அதிரடி!

 
பான் கார்டு

 

இந்திய குடிமகனுக்கான அடையாளம் ஆதார் கார்டு. அதே போல் பான் கார்டு என்பதும் மிகவும் அவசியமான ஒன்று. இந்த பான் கார்டு வங்கியில் கடன் வாங்குதல், வங்கியில் கணக்கு தொடங்குதல், இடம் வாங்குதல் என அனைத்துக்கும் பயன்படுகிறது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

வாக்காளர் அட்டையுடன் ஆதார் கார்டு இணைப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

அதன்படி புதிய பான் கார்டு விண்ணப்பங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்க டிசம்பர் 31ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆதார் பான் கார்டு

அதற்குள் இணைக்க தவறிவிட்டால் ஏற்கனவே உள்ள பான் கார்டு எண்ணை இழக்க நேரிடும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் புதிய பான் கார்டு இணைப்பு பெற ஆதார் எண் கட்டாயம் என்ற விதி நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதுவரை புதிய பான் கார்டு விண்ணப்பங்களுக்கு ஓட்டுநர் உரிமம், பிறப்பு சான்றிதழ் போன்ற அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையை வழங்கலாம். ஆனால் தற்போது ஆதார் அடையாள ஆவணமின்றி புதிய பான் கார்டு பெற முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?