ஆடி கிருத்திகை.. திருவண்ணாமலையில் தனது மகன்களுடன் வழிபாடு செய்த நடிகர் தனுஷ்!

 
தனுஷ்

தமிழ் திரையுலகில் நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் ஜொலித்து வருபவர் தனுஷ். சமீபத்தில் வெளியான இவரது 50வது படமான ராயன் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. தனுஷ் ஹீரோவாக மட்டும் இல்லாமல் படத்தின் இயக்குனரும் கூட. ராயன் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைத்தவர் ஏ.ஆர். ரகுமான்.

ராயன் படத்தில் தனுஷுடன் வரலட்சுமி சரத்குமார், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் வசூலில் ஓடிக்கொண்டிருக்கும் ராயன் படம் பாக்ஸ் ஆபிஸிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. ராயன் படத்தின் வெற்றியை கொண்டாட நடிகர் தனுஷ் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.

ஆடி கிருத்திகை தினமான இன்று நடிகர் தனுஷ் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். தனுஷ்  கையில் ருத்ராட்ச மாலையுடன் பக்தியுடன் கடவுளை தரிசனம் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனுஷுடன் அவரது மகன்களும் வந்திருந்தனர். தனுஷுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்ட பிரசாதமும் வழங்கப்பட்டது.

தனுஷ் திருவண்ணாமலை வருகை தந்த செய்தி அறிந்ததும் அவரை காண கோவிலில் ரசிகர்கள் குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தி நடிகர் தனுஷை பத்திரமாக கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். கோவிலில் தனுஷுடன் சில ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். திருவண்ணாமலை கோவிலுக்கு வந்த தனுஷ் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web