வாழ்வை வளமாக்கும் ஆடிப்பெருக்கு வழிபாடு!

பொதுவாக ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம். காற்றடிக்கும் மாதம். ஆடிப்பட்டம் தேடி விதை என்பது முதுமொழி. அதற்கேற்ப ஆடி மாதம் விவசாயம் தொடங்கும் மாதம், விதை விதைக்கும் மாதம் என்பதால், பூமித்தாயை, நீர் நிலைகளை பூஜித்து நன்றி சொல்லும் விழாவாக ஆடிப்பெருக்கு காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆடி மாதம் முழுவதுமே பல வகையான விசேஷங்களும் திருவிழாக்களும் கொண்டாடப்பட்டாலும் ஆடி மாதம் 18ம் நாள் வரக்கூடிய ஆடிப்பெருக்கு மிக மிக முக்கியமான ஒரு பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவன் வாக்கு. புண்ணிய நதிகளாகஇருக்கும் ஆறுகளுக்கும், நீர் நிலைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் நீர்நிலைகளில், ஆற்றங்கரைகளில் ஆடி மாதம் 18ம் தேதி, ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது.
ஆடி பெருக்கு நாளில், காவேரி ஆறு கரைபுரண்டோடும். காவேரி ஆற்றங்கரையில், லட்சக்கணக்கான மக்கள் திரண்டு ஆடிப்பெருக்கு திருநாளை விழாவாகக் கொண்டாடுவார்கள். ஆடிப்பெருக்கு நாளில், காவிரி நதியை, பெண் தெய்வமாக நினைத்து வணங்கும் நாளாகும். நதிக்கரை இல்லாத ஊர்களில், குளக்கரைகள், ஏரிக்கரைகளில் கூட்டமாக திரண்டு, நீரை வணங்கி, நன்றி செலுத்துவது வழக்கம். ஆடிப்பெருக்கு நாளில் புத்தாடை அணிந்து, சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர் சாதம் என அனைத்து வகையான பதார்த்தங்களையும் சமைத்து நதிக்கரைகளில், நீர் நிலைகளின் கரைகளில் அமர்ந்து பூஜை செய்து, விளக்கேற்றி வழிபாடு செய்வார்கள். அந்த வகையில் நடப்பாண்டில் ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 3ம் தேதி சனிக்கிழமை ஆடிப்பெருக்கு ஆடி 18ம் தேதி வருகிறது. ஆடிப்பெருக்கு நாளில் ராகு காலம் மற்றும் எமகண்ட நேரம் தவிர்த்து, நல்ல நேரத்தில் ஆடி பெருக்கு பூஜை செய்யலாம்.
ஆடிப்பெருக்கு நாளில் நற்காரியங்கள் செய்தால், பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம். பெண்கள் தீர்க்க சுமங்கலி யோகம் பெற ஆடிப்பெருக்கு நாளில் தாலிச்சரடு மாற்றிக் கொள்வார்கள். அதே போல, புதிய தொழில், நல்ல காரியத்துக்கான பேச்சு வார்த்தை என எது தொடங்கினாலும் அது சுபிட்சமாக மாறும் என்பதும் ஐதீகம். திருமணமாகாத பெண்கள் மனதுக்கு பிடித்த கணவன் அமைய வேண்டிக் கொள்வார்கள். ஆடிப் பெருக்கில் புதிய பொருட்கள் வாங்கலாம், நகை வாங்கினால் தங்கம் சேரும் என்பதும் ஐதீகம்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!