ஆடி பௌர்ணமி... கிரிவலம் வர உகந்த நேரம்... திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் அறிவிப்பு!
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோயில், பஞ்ச பூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்நிலையில் ஆடி மாத பெளர்ணமி கிரிவலம் வருவதற்கான உகந்த நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தக் கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள், அண்ணாமலையாரை தரிசனம் செய்து மலையை சுற்றி கிரிவலம் வந்து வழிபடுகின்றனர்.

அதன்படி ஆடி மாத பௌவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரமாக இன்று ஆகஸ்ட் 8ம் தேதி வெள்ளிக்கிழமை பகல் 2.12 மணிக்கு துவங்கி நாளை ஆகஸ்ட் 9ம் தேதி பகல் 1.24 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இரவு கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதே போல், காட்பாடி மற்றும் விழுப்புரம் வழித்தடங்களில் திருவண்ணாமலை - சென்னை பௌர்ணமி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
