இல்லத்தரசிகள் மகிழ்ச்சி... ஆவின் பால் விலை அதிரடி குறைப்பு!

 
ஆவின்

 தமிழகம் முழுவதும் ஆவின் நிர்வாகம் சார்பில் பால்  மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பால் அதன் செறிவின் அடிப்படையில் பல்வேறு நிலைகளில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில் 90 நாட்கள் கெடாமல் பயன்படுத்தப்படும் பால் பாக்கெட்களின் விலையில் ரூ2  தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆவின்

நுகர்வோர் அதிக நாட்கள் பயன்படுத்தும் வகையில் தீவிர வெப்பத்தால் சமன்படுத்தப்பட்ட முறையில் தயார் செய்யப்பட்ட 450 மிலி மற்றும் 150 மிலி அளவிலான பால் பாக்கெட்டுகளின் விலையில் ரூ2  தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.அதன்படி 450 மிலி பால் இதுவரை ரூ30 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இனி ரூ28க்கு விற்பனை செய்யப்படும்.

ஆவின்

அதே போல் 150மிலி பால் இதுவரை ரூ12க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இனி ரூ10க்கு விற்பனை செய்யப்படும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.  இந்தப் பாலுக்கான மொத்தம் மற்றும் சில்லறை விற்பனைக்கு 93436 17445 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web