சுமார்.. 150 அடி ஆழம்... விளையாட சென்ற மகன்... நீரில் மூழ்கி பலியான சோகம்!

 
செந்தில்

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன் தெய்வ பிரசாந்த் (17) தனது நண்பர்கள் 4 பேருடன் அருகே உள்ள கல்குவாரி குட்டைக்கு குளிக்க சென்ற நிலையில், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் பண்டிதகாரனூரில் கூலித் தொழில் செய்து வருபவர் செந்தில். இவருடைய மகன் தெய்வபிரசாந்த் ஆர்.வெள்ளோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில், கோடை விடுமுறையை முன்னிட்டு தனது நண்பர்களுடன் விளையாட செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

விளையாட சென்ற மகன் மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவனது நண்பர்களிடம் விசாரித்த போது, சங்கியப்ப கவுண்டனூரில் தனியார் சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான கல்குவாரி குட்டையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மகன் தண்ணீரில் மூழ்கியது தெரிய வந்தது.

Dindigul

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக குஜிலியம்பாறை போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து, சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படையினர் கல்குவாரி குட்டையில் தெய்வபிரசாந்தை தேடினர். அந்த குட்டையில் சுமார் 150 அடி வரை தண்ணீர் இருந்தது. சமீபத்தில் மழை தொடர்ந்து பெய்ததாலும், இருட்டி விட்டதாலும் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.

பின்னர் மீண்டும் காலையில் தேடுதல் பணிகளை தொடங்கியவர், பிற்பகலில் தெய்வபிரசாந்த் உடலை மீட்டனர். தெய்வ பிரசாந்த் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல அனுமதிக்காமல் மாணவரின் பெற்றோரும், கிராம மக்களும் தர்ணாவில் ஈடுபட்டனர். 

Gujiliamparai PS

அதன் பின்னர், திண்டுக்கல் ஏடிஎஸ்பி சந்திரன், வேடசந்தூர் டிஎஸ்பி துர்கா தேவி ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தனியார் சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான கல்குவாரி குட்டையில் இறந்த மாணவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையை ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

இதையடுத்து உரிய இழப்பீடு தொகை வழங்கப்படும் என ஆலை நிர்வாகம் உறுதியளித்தது. பின்னர் பலியான மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணவன் தந்தை செந்தில் அளித்த புகாரின் பேரில் குஜிலியம்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web