அபுதாபி இளவரசர் ஷேக் ஹஸ்ஸா காலமானார்... உலக தலைவர்கள் இரங்கல்!

 
துபாய் அபுதாபி இளவரசர்

ஐக்கிய எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான அபுதாபியின் இளவரசர் ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Hazza bin Sultan bin Zayed Al Nahyan ) காலாமானார். அவரது மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இளவரசர் ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான், நேற்று முன்தினம் மே 9ம் தேதி காலமானதாக, அபுதாபி அதிபர் அலுவலகம் உறுதிப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளது.  ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் மூத்த மகனான இளவரசர் ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான் காலமானது அபுதாபி குடிமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அபுதாபி இளவரசர்

இவரது மறைவிற்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் அபுதாபி அதிபர் அலுவலகம், இரங்கல் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “இறைவன், இவருக்கு பரந்த கருணையை கொடுக்க வேண்டும் அத்தோடு அவருக்கு சொர்க்கத்தை வழங்க வேண்டும். அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் ஆறுதலை வழங்க எல்லாம் வல்ல இறைவன் அல்லா அருள் புரிய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு வயது முதலே அபுதாபி இளவரசர் குதிரை சவாரி செய்யும் வல்லமை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web