அரசுப்பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதல்... ஒருவர் துடிதுடித்து பலி... தொடரும் சோகம்!!

சென்னையில் கடந்த சில தினங்களாக தொடர் சாலை விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. நேற்று அதிகாலையில் சென்னை அண்ணாநகர் 2-வது அவென்யூ பிரதான சாலையில் கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கோரவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய 6 பேரில் இருவர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்து மது போதையில் வாகனத்தை வேகமாக ஓட்டியதால் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் இன்று காலை மீனம்பாக்கம் சிக்னலில் அரசு பேருந்தும் தனியார் நிறுவனத்தின் வேனும் நேருக்கு நேர் மோதி கோரவிபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் வேன் தலைகீழாக கவிழ்ந்தது. வேனிலிருந்த தனியார் நிறுவன ஊழியர் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர். அரசு பேருந்தில் 40 பயணம் செய்த நிலையில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயங்களும் இன்றி உயிர்த்தப்பினர். இந்த விபத்தால் தாம்பரம்- கிண்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!