மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பில் விபத்து; நடிகர் ஜோஜு ஜார்ஜ் படுகாயம்.. மருத்துவமனையில் அனுமதி!

 
தக் லைப்
 

மணிரத்னத்தின்  ‘தக் லைஃப்’ படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டதில் நடிகர் ஜோஜு ஜார்ஜ் படுகாயம் அடைந்தார். அவருக்கு கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மணிரத்னத்தின் 'தக் லைஃப்' படப்பிடிப்பின் போது ஹெலிகாப்டரில் இருந்து நடிகர் ஜோஜு ஜார்ஜ் குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அப்போது இந்த விபத்து சம்பவம் நடந்துள்ளது.

தக் லைப்
35 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசனும் மணிரத்னமும் இணையும் படம் என்பதால் 'தக் லைஃப்’ படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப் படத்தில் ஜோஜு ஜார்ஜ் நடிக்கிறார் என்று படக்குழுவினர் முன்பே தெரிவித்திருந்தனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 18ம் தேதி சென்னையில் தொடங்கியது. இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். த்ரிஷா கதாநாயகியாக நடித்து வரும் இந்த படத்தில் ஜெயம் ரவி, கவுதம் கார்த்திக், சிம்பு, நாசர், அபிராமி மற்றும் பலர் உள்ளனர்.

தக் லைப்

இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ், ஆர் மகேந்திரன் மற்றும் சிவா ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். திருச்சூரில் இரு கும்பல்களுக்கு இடையே நடக்கும் போட்டியை சித்தரிக்கும் இப்படத்தில் ஜோஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!