தடையை மீறி பேனர்கள் வைத்தால் நடவடிக்கை... எச்சரிக்கை!
Sep 13, 2025, 11:15 IST
இன்னும் சில நாட்களில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் சென்னையை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை காலத்தில் தடையை மீறி பேனர்கள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொது இடங்கள், சாலையோரங்களில் தடையை மீறி பேனர்கள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். வடகிழக்கு பருவமழையை ஒட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
