மாஸ் வீடியோ... மனைவி ஷாலினியை கலாய்க்கும் நடிகர் அஜீத்!

 
அஜீத் ஷாலினி


தமிழ் திரையுலகில் தல ஆக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அஜித் குமார். இவர் தனது மனைவி ஷாலினியுடன் வரலட்சுமி பூஜை கொண்டாடும்  க்யூட்டான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி   வைரலாகி வருகிறது. வரலட்சுமி நோன்பையொட்டி அஜித் காலில் விழுந்து ஆசி பெறுகிறார் நடிகை  ஷாலினி. முதலில் இதனை அஜித் தடுத்து விட்டார்.


சில நொடிகளில் மீண்டும் ஷாலினி காலில் விழுந்ததை அடுத்து, “வீட்டுல போய்ட்டு நான் கால்ல விழணும்” என்று கலகலப்பாக பதிலளித்தார். இந்த பதில் பலரின் கவனத்தை ஈர்த்தது. அஜித்தும் ஷாலினியும்   ‘அமர்க்களம்’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர். 


1999ம் ஆண்டு சரண் இயக்கத்தில்  ‘அமர்க்களம்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருவரும் காதலித்து, அடுத்த ஆண்டே திருமணம் செய்து கொண்டனர். அஜித்தை திருமணம் செய்த பிறகு நடிகை ஷாலினி நடிப்புக்கு ஓய்வு அறிவித்தார்.  அஜித்குமார் தற்போது தனது மோட்டார்ஸ்போர்ட்ஸ்களில் தீவிரமாக களமிறங்கியுள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?