நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டில் பெரும் சோகம்... ராம் சரன் படப்பிடிப்பு ரத்து!
பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் தாயாரும், நடிகர் அல்லு அர்ஜூனின் பாட்டி அல்லு கனகரத்தினம் காலமானார். அவருக்கு வயது 94. நடிகர் ராம் சரண் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள தனது படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு ஹைதராபாத் திரும்புகிறார்.
குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்களின்படி, இறுதிச் சடங்குகளுக்கு முன்பு அல்லு கனகரத்தினத்தின் உடல் அரவிந்த் இல்லத்திற்கு கொண்டு வரப்படும்.
பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் தாயாரும், நடிகர் அல்லு அர்ஜுனின் பாட்டியுமான அல்லு கனகரத்தினம் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 94.

குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்களின்படி, சனிக்கிழமை பிற்பகல் கோகாபேட்டையில் நடைபெறவிருக்கும் இறுதிச் சடங்குகளுக்கு முன்பு அவரது உடல் அரவிந்த் இல்லத்திற்கு கொண்டு வரப்படும்.
அவரது மறைவுச் செய்தி தெலுங்குத் திரையுலகினரை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது இயக்குனர் புச்சி பாபு சனாவின் வரவிருக்கும் அதிரடித் திரைப்படமான பெடியின் படப்பிடிப்பில் மைசூரில் இருந்த நடிகர் ராம் சரண், படப்பிடிப்பை ரத்து செய்து ஹைதராபாத் திரும்பி இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்கிறார்.

ராம் சரண் மற்றும் படக்குழுவினர் கிட்டத்தட்ட 1,000 நடனக் கலைஞர்களைக் கொண்ட ஒரு பிரமாண்டமான பாடல் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தனர். விநாயகர் சதுர்த்தியன்று படப்பிடிப்பு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
