நடிகர் தனுஷ் நடிகர் சங்க கட்டிடத்திற்கு ரூ. 1 கோடி நிதியுதவி!

 
அதிர்ச்சி!தனுஷ் படம் திரையிடப்பட்ட தியேட்டரில் குண்டு வீச்சு!
 

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு நடிகர் தனுஷ் இன்று ரூ. 1 கோடி நிதியுதவி செய்துள்ளார்.  முன்னதாக நடிகர்கள் கமல், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரும் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடப் பணிகளுக்கு நிதியுதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று நடிகர் தனுஷ் ரூ. 1 கோடி வைப்பு நிதியாக வழங்கியுள்ளார். 

தனுஷ்
பொருளாதாரப் பிரச்சினையால் தடைபட்ட தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடப் பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் பூஜையுடன் தொடங்கியது. தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பதற்கு சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படுவதாக முன்பு கணக்கிடப்பட்டது.இதற்காக நடிகர்கள் கமல், விஜய், உதயநிதி ஆகியோர் ரூ. 1 கோடி வைப்புநிதியாக முன்பு வழங்கினர். நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 50 லட்சம் வழங்கினார். இன்று நடிகர் தனுஷ் ரூ. 1 கோடி வழங்கியுள்ளார்.

தனுஷ்

இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. புதிய கட்டிடப் பணிகளைத் தொடர்வதற்காக சங்கத்தின் வைப்புநிதியாக ரூ. 1 கோடியை தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பூச்சி முருகன் ஆகியோரிடம் தனுஷ் வழங்கினார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

 

From around the web