நடிகர் தர்மேந்திரா உடல்நிலை கவலைக்கிடம்... ஷாருக், சல்மான்கான், ஹேமாமாலினி உட்பட மருத்துவமனையில் குவியும் பாலிவுட் நடிகர்கள்!

 
தர்மேந்திரா

இந்திய சினிமாவின் ஹிட் மேன் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா உடல் நிலை மோசமடைந்ததால் மும்பை ப்ரீச் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். அவருக்கு வயது 89.

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று காலை மருத்துவர்கள் ஆலோசனையின்படி ஐசியுவிற்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தர்மேந்திராவின் உடல் நிலை குறித்து தகவல் வெளியானவுடன், குடும்பத்தினரும் பாலிவுட் பிரபலங்களும் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர்.

தர்மேந்திராவின் மகன்கள் சன்னி தியோல், பாபி தியோல், மனைவி ஹேமாமாலினி, மகள் ஈஷா தியோல் ஆகியோர் மருத்துவமனையில் குவிந்தனர். அதன் பின்னர் நடிகர்கள் ஷாரூக் கான் மற்றும் மகன் ஆர்யன் கான், சல்மான் கான், கோவிந்தா, அமீஷா பட்டேல் ஆகியோரும் மருத்துவமனைக்கு வந்தனர். அதிகமான ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் திரளத் தொடங்கியதால், தர்மேந்திரா வீட்டின் அருகே போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தினர்.

தந்தையை பார்த்து விட்டு வெளியே வந்த சன்னி தியோல் முகத்தில் கவலை வெளிப்படையாக தெரிந்தது. அவருடன் வந்த மகன் கரண் தியோலும் உணர்ச்சிவசப்பட்டார். தர்மேந்திரா விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

தர்மேந்திரா

தர்மேந்திராவின் உடல் நிலை குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், “அவரது உடல் நிலை நெருக்கடியான நிலையில் இருந்தாலும் மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் வைத்து சிகிச்சை செய்து வருகின்றனர். நிலைமை மெதுவாக முன்னேறி வருகிறது. வெண்டிலேட்டரில் இல்லை” என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1960களில் சினிமாவில் அறிமுகமாகி, பல தசாப்தங்களாக இந்திய சினிமாவில் தனித்துவமான இடத்தை பிடித்த தர்மேந்திரா, தன்னுடைய எளிமை, மனிதநேயம், கம்பீரமான நடிப்பு காரணமாக ஏராளமான ரசிகர்களை உருவாக்கியவர். தற்போது அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என இந்தியா முழுவதும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!