நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்!

 
கலாபவன்

 மலையாள திரைப்பட நடிகர் கலாபவன் நவாஸ், சோட்டானிக்கரையில் உள்ள விடுதி அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.  படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக விடுதியில் அறை எடுத்துத் தங்கி வந்த நவாஸ் வெகு நேரமாக அறையைத் திறக்காததால், விடுதி ஊழியர்கள் போலீசாருக்கு  தகவல் கொடுத்தனர். 


இந்நிலையில் காவல்துறையினர் விரைந்து வந்து, மயங்கிய நிலையில் இருந்த அவர், அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளனர். திரைத்துறையில் பல்வேறு கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கும் கலாபவன் நவாஸ், மலையாள சினிமாவில் மிமிக்ரி கலைஞர், பின்னணிப் பாடகர் மற்றும் நடிகராக பன்முகத் திறன் பெற்றவராகவும் விளங்கினார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?