கோவை ஷர்மிளாவுக்கு நடிகர் கமல்ஹாசன் கார் பரிசு.. சுய தொழில் செய்ய வழியமைப்பு!

 
கமல் ஷர்மிளா

பப்ளிசிட்டிக்காக இந்த பெண் இப்படி செய்கிறார் என்கிற பேச்சும் கோவையை சுற்றிலும் வலம் வந்தன. நாங்க வேலையை விட்டு தூக்கவில்லை... அவங்களாகவே விலகிக் கொள்கிறேன்னு சொல்லி, பேருந்தை விட்டு இறங்கிப் போயிட்டாங்க என்கிறார் பேருந்து உரிமையாளர்... நான் வேணும்னா மன்னிப்பு கேட்டுக்கறேன் என்று அந்த அக்காவிடம் கூறினேன்.. ஆனால் அதெல்லாம் தேவையில்லைன்னு சொல்லிட்டு போயிட்டாங்க என்கிறார் அதே பேருந்தின் பெண் நடத்துனர்.

கோவை ஷர்மிளாவைச் சுற்றிலும் இத்தனைச் சர்ச்சைகள் வலம் வந்து கொண்டிருக்கையில், அவள் நமது மகள்.. வெறும் பேருந்து ஓட்டுநராகவே வாழ்க்கையைத் தொலைக்க கூடாது என்று கூறி, ஷர்மிளாவுக்கு புதிய காரை பரிசாக அளித்திருக்கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன்.

கோவை வடவள்ளிச் சேர்ந்த ஷர்மிளா, கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக கோவை காந்திபுரம் - சோமனூர் செல்லும் வி.வி. என்ற தனியார் பேருந்தில் பணிபுரிந்து வந்தார். மக்கள் பெரும் வரவேற்பு கொடுத்து  கொண்டாடி வந்த நிலையில், கோவைக்கு செல்லும் அரசியல் கட்சி தலைவர்கள் ஷர்மிளாவைச் சந்தித்து, வாழ்த்து சொல்லி வந்தனர். அந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. 

இந்நிலையில், தூத்துக்குடி எம்பி கனிமொழி, ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் கடந்த வெள்ளிக்கிழமை காந்திரபுரத்தில் இருந்து ஹோப்ஸ் வரை பயணம் செய்தார். கனிமொழி பயணத்தின் போது அந்த பேருந்தில் பணியாற்றி வரும் பெண் பயிற்சி நடத்துநர், கனிமொழியுடன் பேருந்தில் ஏறியவர்களிடம் பயணத்திற்கு டிக்கெட் கட்டணம் கேட்டுள்ளார்.

கனிமொழியோ சிரித்த முகத்துடன் தனது பிஏ மூலம் டிக்கெட்டை பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் கனிமொழி ஹோப்ஸ் சாலை அருகே இறங்கி விட்டார். பின்னர் ஷர்மிளா பேருந்தில் இருந்து இறங்கி விட்டார். அவர் மீண்டும் பேருந்தில் ஏறி என்னை சந்திக்க வந்த கனிமொழி எம்பியிடம் ஏன் டிக்கெட் கேட்டீர்கள் என அந்த பெண் பயிற்சி நடத்துநரிடம் கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்குள் வாக்குவாதமாக மாறியது. 

Sharmila

இது குறித்து பேருந்து உரிமையாளர் துரைகண்ணுவிடம் ஷர்மிளா முறையிட்டார். அதற்கு அவர் விளம்பரத்திற்காக இதையெல்லாம் செய்கிறாயா என கேட்டாராம். இதையடுத்து ஷர்மிளா அந்த பேருந்து நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறினார்.

காலையில் கனிமொழி சந்தித்த நிலையில் அன்று மாலையே ஷர்மிளா பணிநீக்கம் செய்யப்பட்டதாக வதந்தீ பரவி விவாதத்திற்குள்ளானது. இதையடுத்து ஷர்மிளாவுக்கு தேவையான உதவிகளையும் அவருக்கு பணியையும் வழங்க தான் ஏற்பாடு செய்வதாக கனிமொழி எம்பி உறுதியளித்தார். அதன்பேரில் அந்த பெண்ணும் கனிமொழி சிபாரிசு செய்த இடத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கமல்ஹாசன், ஷர்மிளாவுக்கு கார் பரிசளித்துள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி, முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரலட்சுமி போல கோயம்புத்தூரில் முதன்முறையாக தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்தவர் ஷர்மிளா.

ஷர்மிளா

பேருந்து ஓட்டுநராக வரவேண்டுமெனும் தன்னுடைய கனவிற்காக உழைத்து, சவாலான பணியை திறம்படச் செய்து வந்தார். அதற்காகப் பல்வேறு தரப்பின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார். தன் வயதையொத்த பெண்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஷர்மிளா குறித்த சமீபத்தைய விவாதம் என் கவனத்திற்கு வந்தது. மிகுந்த வேதனை அடைந்தேன்.

ஷர்மிளா ஓர் ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல. பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவரென்பதே என் நம்பிக்கை. கமல் பண்பாட்டு மையம் தனது பங்களிப்பாக ஒரு புதிய காரை ஷர்மிளாவிற்கு வழங்குகிறது. வாடகைக் கார் ஓட்டும் தொழில்முனைவராக தனது பயணத்தை ஷர்மிளா மீண்டும் தொடரவிருக்கிறார்.

ஆண்டாண்டு காலமாய் அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தங்கள் தடைகளை உடைத்து தரணி ஆளவருகையில், ஒரு பண்பட்ட சமூகமாக நாம் அவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மகள் ஷர்மிளாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web