நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.. சர்வதேச இந்திய திரைப்பட அகாடமியில் கெளரவம்!

இந்த மாதம் 26 மற்றும் 27ம் தேதி அபுதாபியில் நடைபெற உள்ள சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (IIFA) ஒவ்வொரு வருடமும் விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த வருட விருது வழங்கும் நிகழ்ச்சி அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் மே மாதம் 26, 27 தேதிகளில் நடைப்பெற உள்ளது.
The living legend #KamalHaasan will be felicitated for ‘Outstanding Achievement in Indian Cinema’ at NEXA IIFA Awards on 27th May 2023, Yas Island, Abu Dhabi🏆 pic.twitter.com/ndoDAc5oJb
— IIFA (@IIFA) May 20, 2023
பாலிவுட் நடிகர் அபிசேக் பச்சன் தொகுத்து வழங்கும் இந்த விருது நிகழ்ச்சியில் நடிகர்கள் சல்மான் கான், ஹ்ரித்திக் ரோஷன், அனில் கபூர், கீர்த்தி சனோன் உட்பட திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த விழாவில், சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கிறது. இந்திய திரைத்துறைக்கு பல ஆண்டுகளாக மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கி வருவதற்காக இந்த விருதை நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்குவதாக சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி தெரிவித்துள்ளது.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!