வைரல் வீடியோ!! நடிகர் பிரபாஸ் திருப்பதியில் சாமி தரிசனம்!!

 
ஆதிபுருஷ்

பாகுபலி படத்தின்  மூலம் ”பான் இந்தியா” நடிகராக  இந்திய அளவில் பெரும் பேசுபொருளானவ நடிகர்  பிரபாஸ். அதே நேரத்தில் பாகுபலி படத்துக்கு பிறகு  இவர் நடிப்பில் வெளியான படங்கள்   அடுத்தடுத்து தோல்வியை தழுவின. அந்த வகையில்  தற்போது பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ராதே ஷியாம்”  ரூ.100 கோடிக்கு மேல் பெரும் நஷ்டத்தை சந்தித்தது.


இந்நிலையில், அவர் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம்   ஜூன் 16ம் தேதி ரிலீசுக்கு தயாராக  உள்ளது. இராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் ராமராக நடித்துள்ளார் பிரபாஸ். இதில் அவருக்கு ஜோடியாக சீதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்துள்ளார். ரூ.600 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

ஆதிபுருஷ்

ஆதிபுருஷ் படத்தின் ரிலீசுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. இந்த நேரத்தில்  படத்திற்கான  புரமோஷன் பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் திருப்பதியில் இன்று மாலை அப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web