மாஸ் வீடியோ... கேப்டனை ரொம்ப மிஸ் செய்றேன்... நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!

 
ரஜினி

 தமிழ் திரையுலகில் கேப்டனாக கொண்டாடப்படுபவர்   நடிகர் விஜயகாந்த். இவருக்கு  சமீபத்தில்  பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்ட  நிலையில் மே 9ம் தேதி  கேப்டன் சார்பில் அவரது மனைவி  தேமுதிக பொதுச் செயலாளர்  பிரேமலதா விஜயகாந்த் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து அதனை பெற்றுக் கொண்டார்.  பிரேமலதா சென்னை திரும்பியதும் பத்ம பூஷண் விருது மற்றும் பதக்கத்தை விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகின. இந்நிலையில்  விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து ஒன்றை பதிவிட்டுள்ளார். இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வீடியோவில் “என்னுடைய அருமை நண்பர் விஜயகாந்த் அவர்களுக்கு பத்மபூஷன் விருது கொடுத்து கௌரவித்ததில் மிகுந்த  மகிழ்ச்சி. அதுமட்டுமில்லாமல் பத்ம விருதுகள் 2024 புத்தகத்தில் அவருடைய வரலாற்றை பதிவிட்டிருக்கிறார்கள். அது அவருடைய பெயருக்கு இன்னும் பெருமை சேர்க்கிறது.

விஜயகாந்த் மறைவை  இன்னும் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. திடீரென்று தோன்றி பல சாதனைகள் செய்து அப்படியே மறைந்துவிட்டார். இனிமேல் விஜயகாந்த் போன்ற ஒருவரை பார்க்கவே முடியாது. அவரை மிகவும் மிஸ் செய்கிறேன். மதுரையில் பிறந்த மதுரை வீரன் கேப்டன் விஜயகாந்த் என பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web