No Comments ... சினிமா நடிகர் பிரச்சாரத்திற்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறுமா? நழுவிய நடிகர் ரஜினிகாந்த்!

 
ரஜினி


சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தின் 2 வது பாகத்திற்கான படப்பிடிப்பு பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில்  ”இதனையடுத்து  ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயன்ஸ் பிலிம்ஸ்க்கு சேர்ந்து ஒரு திரைப்படம் செய்யப்போகிறேன்.

அந்த படத்திற்கு இயக்குனர் யார் என்பது குறித்த பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. விரைவில் நானும் கமல்ஹாசனும் இணைந்தது நடிக்கவேண்டும் என்பது என்னுடைய ஆசை. எனவே, அதற்கு ஏற்றது போல கதாபாத்திரம் கிடைத்தது என்றால் நிச்சயமாக நடிப்பேன்.


ஜெயிலர் 2  படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.  அதனைத்தொடர்ந்து படம் எப்போது வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கலாம்? என கேட்கப்பட்ட கேள்விக்கு  பதில் அளித்த ரஜினிகாந்த் “இன்னும் படத்தின் படப்பிடிப்பு 6 நாட்களில் மொத்தமாக முடிந்துவிடும். படம் வருவதற்கு 2026  ஜூன், ஜூலை மாதத்தில் ரிலீஸ் ஆகலாம்” எனக் கூறியுள்ளார்.  அரசியலை பொறுத்தவரை திரைக் கலைஞர்களுக்கு வரும் கூட்டம் வாக்காக மாறுமா? என த.வெ. க தலைவர் விஜய் பிரச்சாரத்தை மையமாக வைத்து கேட்கப்பட்ட கேள்விக்கு  ரஜினிகாந்த் No Comments என சுருக்கமாக பதில்கூறி கிளம்பிச் சென்றார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?