நடிகர் ‘சிங்கப்பூர் சிவா‌ஜி’ காலமானார்... மேடையிலேயே மயங்கி விழுந்து மரணம்... பிரபலங்கள் இரங்கல்!

 
சிங்கப்பூர் சிவாஜி
 

பிரபல மேடை நாடக நடிகரும், பல குரல் மன்னருமான சிங்கப்பூர் ‘சிவாஜி’ என்று அழைக்கப்படும் அசோகன் எனும் அசோகன் முனியாண்டி கடந்த சனிக்கிழமையன்று காலமானார். அவருக்கு வயது 60.

சிங்கப்பூர் சிவாஜி

‘சிவாஜி’ அசோகன், மறைந்த பிரபல நடிகர்கள் எம்ஜிஆர், எம்ஆர் ராதா போன்றவர்களைப் போல் மேடை நாடகங்களில் நடிக்கக்கூடியவர். அதிகமாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பாடல்களுக்கு அவரைப்போல பாவனை செய்தும், அவர் நடித்த படக் காட்சிகளை நடித்துக் காட்டியும் சிங்கப்பூர், மலேசியா உட்பட பல நாடுகளில் ரசிகர்களிடையே புகழ் பெற்றார் அசோகன். 

அதனால், ரசிகர்கள் இவரை ‘சிவாஜி’ அசோகன் என்று அழைத்து வந்தனர். வெளிநாட்டு ரசிகர்கள் இவரை சிங்கப்பூர் சிவாஜி என்றே அழைத்து வந்தனர்.

சிங்கப்பூர் சிவாஜி

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று மாலை பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட திரு.அசோகன், மேடையில் மயங்கி விழுந்ததாகத் தகவல்கள் வெளியானது. அதன் பின்னர் உடனடியாக அவரை சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், ‘சிவாஜி’ அசோகன் சிகிச்சை பலனின்றி காலமானதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அவரது மறைவுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!