பாதிக்கப்பட்ட மாணவியுடன் நாம் அனைவரும் நிற்க வேண்டும்...” நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி!

 
சிவகார்த்திகேயன்
 

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவியுடன் நாம் அனைவரும் நிற்க வேண்டும் என்று இன்று திருச்செந்தூர் கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

திருச்செந்தூர் கந்தசஷ்டி

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். நடிகர் சிவகார்த்திகேயனுக்கு திருச்செந்தூர் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். 

அதனை தொடர்ந்து கோவிலில் இருந்து வெளியே வந்த நடிகர் சிவகார்த்திகேயனிடம் செய்தியாளர்கள் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பினர். 

சிவகார்த்திகேயன்

அதற்கு பதிலளித்து பேசிய அவர், “இது மாதிரி விஷயங்கள் நடக்க கூடாது. காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் சரிதான். இருந்தாலும் நாம் அனைவரும் பாதிக்கப்பட்ட மாணவியுடன் தான் நிற்க வேண்டும். அந்த மாணவிக்கு முழு தைரியம் இருக்க வேண்டும். இனிமேல் இந்த மாதிரி சம்பவம் நடக்க கூடாது என கடவுளிடம் வேண்டுவோம்” என்றார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web