போலீசாரிடம் சிக்கினார் நடிகர் ஸ்ரீகிருஷ்ணா... ரத்த பரிசோதனை?!

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் திரை உலக பிரபலங்கள் பலர் மீது போலீசாரின் சந்தேக பார்வை வீச தொடங்கி இருக்கிறது. போதைப் பொருள் சப்ளை செய்ததாக கைதான பிரதீப் வாக்குமூலத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சப்ளை செய்ததாக கூறி உள்ளார். போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணாவும் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர போலீசார் திட்டமிட்டனர். கிருஷ்ணாவுக்கு நேற்று போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் கிருஷ்ணா செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகி விட்டார். 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த 2 நாட்களாக போலீசார் தேடி வந்தநிலையில், தனிப்படை போலீசார் ஸ்ரீகிருஷ்ணாவை தேடி பிடித்துள்ளனர்.
அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், அவரிடமும் ரத்த மாதிரிகளை எடுத்து சோதனை மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரத்த பரிசோதனையில் ஸ்ரீகிருஷ்ணா (கொகைன்) போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டால் ஸ்ரீகாந்தை போல் ஸ்ரீகிருஷ்ணாவும் போலீசாரால் கைது செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!