கேரளாவில் அரசியல் வரலாற்றை மாற்றினார் நடிகர் சுரேஷ் கோபி... திருச்சூர், திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி!

 
கேரளாவில் அரசியல் வரலாற்றை மாற்றினார் நடிகர் சுரேஷ் கோபி... திருச்சூர், திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி!

இத்தனை வருட கடின உழைப்புக்குப் பிறகு வெற்றியை நெருங்கி, இறுதியாக சுரேஷ் கோபி திருச்சூரில் வெற்றியடைந்ததின் மூலமாக கேரளத்தில் பாஜகவின் வெற்றிக் கணக்கைத் துவக்கிய பெருமையைப் பெறுகிறார். 

கேரளாவில் தாமரை மலரும் அறிகுறிகளுடன், திருச்சூரில் நடிகர் சுரேஷ் கோபி தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளார். கடைசியாக வெளியான வாக்கு எண்ணிக்கை விபரங்களின் படி ​​அவர் 44002 வாக்குகளுக்கு மேல் முன்னிலை வகிக்கிறார். மூன்றாவது இடத்தில் காங்கிரசின் கே.முரளீதரன் உள்ளார். வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் UDF மற்றும் LDF மாறி மாறி முன்னேறிய தொகுதியில் ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு சுரேஷ் கோபி முன்னிலை பெற்றார். 

சுரேஷ் கோபியின் வருகையால் கேரளா மட்டுமின்றி தேசிய அளவிலும் திருச்சூர் தொகுதி கவனம் பெற்றது. கடந்த லோக்சபா தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளன்று போட்டியில் களமிறங்கிய சுரேஷ் கோபி, பிரசாரத்தை தீவிரப்படுத்தி இரு அணிகளையும் அதிர வைத்து ஓட்டு சதவீதத்தை அதிகப்படுத்தினார். அன்று தொடங்கிய கடின உழைப்பு இப்போது வெற்றியை நோக்கி செல்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில் திருச்சூரில் போட்டியிட்டாலும், லோக்சபா தான் தன் இலக்கு என கூறியிருந்தார்.

'இந்த முறை திருச்சூரில் இருந்து மத்திய அமைச்சர் வருவார், மோடி கேரண்டி' என திருச்சூரில் பிரசாரத்தை தீவிரப்படுத்தினார் பிரதமர் மோடி.  தங்களது கோட்டையாக விளங்கும் கேரளாவில் உள்ள திருச்சூரை கைப்பற்றும் நோக்கில் பாஜக பிரச்சாரம் செய்தது. அதற்காக பலமுறை பிரதமர் மோடி அழைத்து வரப்பட்டார். தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே சுரேஷ் கோபியும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அறிவிக்கப்பட்ட வேட்பாளராக இருந்தார். சுரேஷ் கோபிக்காக பிரதமர் நரேந்திர மோடி 3 முறை திருச்சூர் வந்திருந்தார்.

சுரேஷ் கோபியை எதிரிகள் அதிகம் ட்ரோல் செய்தாலும் சுரேஷ் கோபியின் பிரசாரம் அவருக்கே உரிய சினிமா பாணியில் இருந்தது. வேட்பாளரை சந்திக்கவும், அவருடன் செல்ஃபி எடுக்கவும் மக்கள் திரண்டனர்.  பெண்களின் ஆதரவு சுரேஷ் கோபிக்கு சாதகமாக இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.  அதே போல் திருவனந்தபுரத்திலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web